புதுச்சேரி மாநிலத்தில் 11 வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, புதுச்சேரி கலால்துறை துணை ஆட்சியர் ரவிச்சந்திரன் வருவாய்த்துறை சிறப்பு செயலராகவும், அங்கிருந்த சுரேஷ்ராஜ் பாகூர் வட்டாட்சியராகவும், காரைக்கால் வருவாய்த்துறை துணை ஆட்சியர் சரவணன் வில்லியனூர் தெற்கு வருவாய் துறை துணை ஆட்சியராகவும், காரைக்கால் சட்ட எடையளவு துறை வட்டாட்சியர் பொய்யாமூர்த்தி காரைக் கால் வட்டாட்சியராகவும், அங்கிருந்த முத்து காரைக்கால் சட்டஎடையளவு துறைக்கு மாற்றப் பட்டுள்ளார்.
புதுச்சேரி வட்டாட்சியர் ராஜேஷ்கண்ணா காரைக்கால் வருவாய்துறை துணை ஆட்சியராகவும், புதுச்சேரி நில அளவை பிரிவு வட்டாட்சியர் கார்த்திகேயன் புதுச்சேரி வருவாய் பேரிடர் மேலாண்மை துறைக்கும், புதுச்சேரி வருவாய் பிரிவு சிறப்பு செயலர் செந்தில்குமார் நில அளவை பிரிவுக்கும் மாற்றப் பட்டுள்ளனர்.
பாகூர் வட்டாட்சியர் குமரன் புதுச்சேரி வட்டாட்சியராகவும், புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் வட்டாட்சியர் மாசிலாமணி கலால் துணை ஆட்சியராகவும், புதுச்சேரி கலால் துணைஆட்சியர் ஆறுமுகம் குடிமைப்பொருள் வழங்கல் துறைக்கும் இடமாற்றம் செய் யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவைவருவாய் சிறப்பு செயலர் பூர்வா கார்க் பிறப்பித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago