புதுவையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
மாசி மக திருவிழா புதுவையில் தொடர்ந்து இன்றும் பல்வேறு இடங்களில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதையொட்டி புதுச்சேரியில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை விடுமுறையை அறிவித்துள்ளது. புதுச்சேரி அடுத்த திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோயிலில் மாசிமக பிரமோற்சவ விழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா 9-ம் நாளான நேற்று முன்தினம் நடைபெற்றது. தொடர்ந்து 10-ம்நாளான நேற்று மாசிமக தீர்த்தவாரி நிகழ்ச்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் நடைபெற்றது. இதையொட்டி திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் தேவஸ்தானத்தில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பிரம்மோற்சவம் நாட்களில் காலை, மாலையில் சிறப்ப அபிஷேகம், தீபாராதனைநடைபெற்றது.அதேபோல் சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலிலும் மாசி மக விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சாமிகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக வந்து, கோயில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அங்கு கூடிய பக்தர்கள், பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago