அமலானது தேர்தல் விதிமுறைகள் அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் அகற்றம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. அதனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை முதல் உடனடியாக அம லுக்கு வந்தன.

மதுரை மாவட்டத் தேர்தல் அதிகாரியாக, மாவட்ட ஆட் சியர் அன்பழகன் நியமிக்கப் பட்டுள்ளார். இதையடுத்து, தேர் தல் பிரிவுகள், கட்டுப்பாட்டு அறைகள் என அனைத்தும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் செயல்பாட்டுக்கு வந்தன.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலு வலகத்தில் உள்ள முதல்வர் சம்பந்தமான அனைத்துப் புகைப்படங்களும் அகற்றப் பட்டன. அரசு சாதனைத் திட் டங்களை விளக்கும் பேனர்கள், புகைப்படங்கள் அகற்றப்பட்டன.

அதுபோல், திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், விருதுநகர் ஆட்சியர் அலுவல கங்கள், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்த அரசு சாதனை விளம்பரங்கள், முதல்வர், துணைமுதல்வர் புகைப்படங்கள் அகற்றப்பட்டன.

விதிமுறைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரி களுடன் ஆலோசனைகளை மேற் கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்