திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மனை வழி பட்டனர்.

திண்டுக்கல் கோட்டை மாரியம் மன் கோயில் மாசித் திருவிழா பூ அலங்காரத்துடன் தொடங்கியது. இதையடுத்து பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

பூத்தேர் ரத வீதிகளில் உலா வந்தது. வழிநெடுகிலும் மக்கள் பூக்களை வழங்கி வழிபட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் வைபவம் நேற்று காலை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

இன்று (பிப்.27) தசாவதாரம் நடைபெற உள்ளது. மார்ச் 1-ம் தேதி கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்