ராஜீவ் கொலை கைதி பரோல் கேட்டு வழக்கு தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு

By செய்திப்பிரிவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் கைதி ரவிச்சந்திரன் பரோல் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு, தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண் டனை அனுபவித்து வருபவர் ரவிச்சந்திரன். இவரது தாயார் ராஜேஸ்வரி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

ராஜீவ்காந்திகொலை வழக்கில் ரவிச்சந்திரன் உட்பட 7 பேர் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை முன்கூட்டியே விடுதலை செய் வது தொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்பு தலுக்கு அனுப்பப்பட்டது.

அமைச்சரவையின் தீர் மானத்தை ஆளுநர் சமீபத்தில் நிராகரித்து, 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க முடியும் எனத் தெரிவித்தார். கரோனா காலத்தில் ரவிச்சந்தி ரனுக்கு 3 மாதம் பரோல் கேட்டு மனு அனுப்பினேன். மத்திய அரசின் சட்டத்தின் கீழ் ரவிச்சந்திரன் தண்டிக்கப்பட்டு இருப்பதால், மாநில அரசால் பரோல் வழங்க முடியாது என்று கூறி எனது மனு நிராகரிக்கப்பட்டது. 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் ரவிச்சந்திரனுக்கு 2 மாதம் பரோல் வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கல் யாணசுந்தரம், இளங்கோவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார்.

மனுதாரர் வழக்கறிஞர் வாதிடு கையில், அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய தொடர்ந்து அவகாசம் கேட்கப்படுகிறது. தேர்தலைக் கருத்தில் கொண்டு ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க வேண்டும் என்றார்.

இதையடுத்து, அரசு தரப் பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 17-க்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்