இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் சிரமம்

By செய்திப்பிரிவு

அரசு போக்குவரத்து தொழிலாளர் கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டதால் போதிய எண்ணிக் கையில் பேருந்துகள் இயக்கப் படாமல் மக்கள் சிரமப்பட்டனர்.

14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண் டும். ஓய்வூதிய பணப்பலன் களை வழங்க வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழகத் தொழி லாளர்கள் 2-வது நாளாக நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மண்டலத்தில் நேற்று 70 சதவீதப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் மக்கள் சிரமம் அடைந்தனர்.

அனைத்து பணிமனைகள் முன்பும் தொழிலாளர்கள் ஆர்ப் பாட்டம் நடத்தினர். இதனி டையே, சென்னையில் தொழி லாளர் ஆணையர் தொழிற் சங்க நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது. போக்குவரத்து அதிகாரிகள் நிதித்துறை செய லருடன் விவாதிக்கச் சென்றதால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய தொமுச பொதுச்செயலாளர் அல்போன்ஸ், "பேச்சுவார்த்தை நடைபெறாததால் வேலைநிறுத்தம் தொடரும்" என் றார்.

விருதுநகர்

விருதுநகரில் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொமுச செயல்தலைவர் மாடசாமி தலைமை வகித்தார்.

பொதுச்செயலாளர் ராஜா செல்வம், சிஐடியூ பொதுச் செய லாளர் வெள்ளத்துரை, மண்டலத் தலைவர் வேலுச்சாமி, ஏஐடியூசி துணைத் தலைவர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தொமுச செயல் தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்ற வேலை நிறுத்தத்தால் மாவட்டத்தில் 60 சதவீத பேருந்துகள் இயக்கப் படவில்லை.

தேனி

தேனி மாவட்டத்தில் தேனி, பெரி யகுளம், போடி, தேவாரம், கம்பம்1, கம்பம்2, லோயர்கேம்ப் உள்ளிட்ட 7 அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனைகள் உள்ளன. மொத் தமுள்ள 368 பேருந்துகளில் 150 பேருந்துகள் மட்டுமே இயக்கப் பட்டன. இரவுநேரப் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்