டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்தம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 5 ஆயிரம் லாரிகள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டன. இதனால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஈடுபட்டதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். சங்கத்தின் தலைவர் பி.பாலசுப்பிரமணியன், செய லாளர் பி.வி. முருகபெருமாள், பொருளாளர் எஸ்.ஆர். வெங்கடாசலம் ஆகியோர் தலைமையில் சைக்கிளில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

மனு விவரம்:

திருநெல்வேலி மாவட்டத்தில் லாரி தொழிலை நம்பி மட்டும் நேரடியாக 3 ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக 5 ஆயிரம் குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றன. லாரி தொழில் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் டீசல் விலை உயர்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

தினமும் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சுங்க கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். காப்பீடு உயர்வை குறைக்க வேண்டும். வாகன கழிவு கொள்கையை ரத்து செய்ய வேண்டும். உதிரிபாகங்கள் செலவு அதிகரிப்பை குறைக்க வேண்டும். பிஎஸ் 6 வாகனங்களின் செலவு அதிகரிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்