மருத்துவர் சமூக மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் நேற்று கடைகளை அடைத்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்டத் தலைவர் தங்கவேல், செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் உலகநாதன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
அரியலூர் ஒற்றுமைத் திடலில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.வேல்முருகன் தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர் பி.குணசேகரன், மாவட்டத் தலைவர் வெங்கடாசலம், பொருளாளர் முருகேசன், மாநில பொதுச் செயலாளர் சுந்தர்ராஜன், மகளிர் அணி அமைப்பாளர் கவுசல்யா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் பாலக்கரை அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜ், குமார், நல்லதம்பி, விஜயகுமார், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இணைப் பொதுச் செயலாளர் குணசேகரன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் மணிகண்டன் நன்றி தெரிவித்தார்.
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பி.வி.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் பி.முத்து, நகர அமைப்பாளர் எம்.அன்புவேல் ஆகியோர் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தனர். நகரத்தலைவர் டி.சீனிவாசன், நகர துணைத்தலைவர் பி.ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் எம்.குப்புசாமி வரவேற்றார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் என்.பெருமாள், துணை அமைப்பாளர் வி.பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் கண்ணன் தலைமையில் திரளானோர் கலந்துகொண்டனர்.
நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ரவிக்குமார் தலைமையில் பலர் பங்கேற்றனர். இதேபோல, தமிழ்நாடு மருத்துவ குல சங்கம் சார்பில் நாகை அவுரித்திடலில் மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago