தென்மாவட்டங்களில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 3 நாள் சுற்றுப்பயணம் மேற் கொள்கிறார். இதற்கான ஏற்பாடு கள் தயார் நிலையில் உள்ளன என்று, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய்தத் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:
தென்மாவட்டங்களில் ராகுல்காந்தியின் சுற்றுப்பயணத் தின்போது திருநெல் வேலியில் கல்லூரி பேராசிரியர், கல்வியாளர்களுடனும், தென்காசி மாவட்டம் புளியங்குடி யில் விவசாயிகள், சிறு, குறு தொழில் முனைவோர், நெச வாளர்களுடனும், கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூட்டில் மாணவர்களுடனும் அவர் கலந்துரையாடுகிறார்.
புதுச்சேரியில் ஜனநாயக படுகொலையை பாஜக நிறைவேற்றியிருக்கிறது. இதை மக்கள் நன்கறிவர். தமிழகத்தில் முக்கிய அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை ஆளுநரிடம் திமுக அளித்திருக்கிறது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. ஆட்சிபோகும் நிலை யில் பல திட்டங்களை முதல்வர் அறிவித்து கொண்டிருக்கிறார்.
நாடு முழுவதும் எதிர்க் கட்சியினருக்கு அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் பாஜக நெருக்கடி கொடுக்கிறது. அதேநேரத்தில் மத்திய அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பெட்ரோல் விலை உயர்வால், அனைத்து பொருட்களின் விலையும் ஏறிவிட்டது. சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், என்று அவர் தெரிவித்தார்.
முன்னாள் மத்திய இணைய மைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனி ருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago