ஆதிதிராவிடர் நலத் துறை விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ், 3 கல்லூரி மாணவர் விடுதிகள், 6 கல்லூரி மாணவிகள் விடுதிகள், 16 பள்ளி மாணவர் விடுதிகள், 7 பள்ளி மாணவிகள் விடுதிகள், பழங்குடியின இருளர் இன மாணவ, மாணவிகள் மற்றும் தொழிற்பள்ளி மாணவர்களுக்கு தலா 1 விடுதி என மொத்தம் 36 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 9, 11-ம்வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் முதலாமாண்டு படிக்கும் மாணவ, மாணவிகளும் சேரத் தகுதியானவர்கள். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

விடுதிகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும் விடுதிகளில் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அதைப் பூர்த்திசெய்து, கல்விச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றுடன் இணைத்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்