கடைமடை வரை நீர் சென்றடைவதை உறுதி செய்ய கீழ்பவானி கால்வாய் நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 401 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய்கள் நவீனப்படுத்தப்பட்டு 2 லட்சத்து 47 ஆயிரத்து 247 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும். இந்த திட்டத்துக்கான நிதிகளையும், தமிழகத்தின் இதர நீர்ப்பாசன திட்டங்களுக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்திடுமாறு பிரதமரை கேட்டுக்கொள்கிறேன். கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும். நவாமி கங்கை திட்டத்தை போன்று காவிரி கிளை நதிகள் புனரமைக்கப்பட வேண்டும். கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் தலா 50 சதவீதம் அடிப்படையில் கூட்டு திட்டமாக செயல்படுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும். சேலம் மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களிலிருந்து இரவு நேர விமானங்களை இயக்க ஒப்புதல் அளிக்க வேண்டும். மதுரை மற்றும் கோவை விமான நிலையங்களின் விரிவாக்கம் விரைந்து நடைபெறவும், கோவையிலிருந்து துபாய்க்கு நேரடி விமானங்களை இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago