கோவை செட்டிபாளையத்தை அடுத்த கள்ளப்பாளையத்தில், கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) சார்பில் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில், 130 தொழிற்சாலைகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதை முதல்வர் கே.பழனிசாமி கடந்த 16-ம் தேதி திறந்துவைத்தார்.
இதுகுறித்து கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ்பாபு கூறும்போது, "கள்ளப்பாளையம் தொழிற்பூங்காவில் சாலை, தண்ணீர், வடிகால் வசதி உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன், மின்சார வாரியத்தின் மின் வழங்கல் பணிகளுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு தொழில் நிறுவனங்கள் இயங்கத் தொடங்கியவுடன் கழிவுநீர் சுத்திகரிப்பு மையமும் இயங்கத்தொடங்கும்.இந்த தொழிற்பூங்காவை பசுமை மற்றும் தற்சார்பு முறையில் மேம்படுத்துவதற்காக, இந்திய பசுமை கட்டிட கழகம், இந்திய தொழில் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழிற்பூங்காவை பசுமை வளாகமாக உருவாக்கும் முயற்சியில் 1,400 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. முதல்கட்டமாக சுமார் 15 நிறுவனங்கள் இங்கு அமைய உள்ளன. அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொழிற்பூங்கா அமைய உதவியமைக்காக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறோம்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago