போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் பேருந்துகளின் சேவை குறைவாக இருந்த நிலையில், சென்னையில் மக்கள் பலரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்தனர். இதனால் மெட்ரோ ரயில்களில் வழக்கத்தைவிட 30 சதவீதம் கூட்டம் அதிகரித்திருந்தது.
சென்னையில் அடுத்தகட்ட போக்குவரத்து வசதியாக மெட்ரோ ரயில் சேவை மாறி வருகிறது. சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் வடசென்னையை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதால், பயணிகள் போக்குவரத்து நெரிசலின்றி பயணித்து வருகின்றனர். மேலும் மெட்ரோ ரயில் கட்டணமும் ரூ.10 முதல் ரூ.20 வரை குறைக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், நேற்று பொதுமக்கள் பேருந்து போக்குவரத்தை தவிர்த்து மெட்ரோ ரயில்களில் அதிக அளவில் பயணம் செய்தனர். அவர்களின் வசதிக்கு ஏற்றார்போல், 5 நிமிடத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் சேவை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் மேற்கண்ட காலஇடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டதால், பயணிகள் அதிகளவில் பயணம் செய்தனர். மற்ற நாட்களைக் காட்டிலும் சுமார் 30 சதவீதம் வரையில் கூட்டம் அதிகரித்திருந்ததாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, “போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து சென்னையில் மெட்ரோ ரயில்களின் சேவை அதிகரித்திருப்பது வரவேற்க கூடியது. இதனால், மெட்ரோ ரயில்களில் மக்கள் அதிகளவில் பயணித்தனர். கட்டண குறைப்பும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
மற்ற வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை வரும்போது பயணிகள் அதிகளவில் பயனடைவார்கள். வரும் காலத்தில் சிறந்த மாற்று போக்குவரத்து வசதியாக இது மாறும்’’என்றனர்.
காலை 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் மேற்கண்ட கால இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டதால், பயணிகள் அதிகளவில் பயணம் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago