‘திராவிட ஆட்சி - மாற்றமும் வளர்ச்சியும்’ நூல் வெளியீடு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

By செய்திப்பிரிவு

பொருளாதார ஆய்வறிஞர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான ‘திராவிட ஆட்சி - மாற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்நூலை ஸ்டாலின் வெளியிட, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, ‘தி இந்து’ நாளிதழின் வாசகர் ஆசிரியர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இதுதொடர்பாக திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதாரம் படைத்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழகம் வளர்ந்துள்ளதை வெவ்வேறு குறியீடுகள் சுட்டிக் காட்டுகின்றன. தமிழகத்தின் வளர்ச்சி என்பது வெறும் எண்களின் உயர்வும், தாழ்வும் அன்று. அது சமுதாயத்தில் நடந்தேறிய, தொடர்ந்து நடந்து வரும் மாற்றம்.இந்த மாற்றத்தை விதைத்தது திராவிட இயக்கமும், அதிலிருந்து தோன்றிய கட்சிகளும்தான்.

இது எப்படி நிகழ்ந்தது? இதைச் சாத்தியமாக்கியது சமூகநீதி பயணம்தான் என்ற கோணத்தில் பொருளாதார ஆய்வறிஞர் ஜெ.ஜெயரஞ்சன் உள்ளிட்ட பல ஆய்வறிஞர்கள் எழுதிய 12 கட்டுரைகள் ‘திராவிட ஆட்சி - மாற்றமும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்