பிரதமர் மோடி பல்வேறு நலத்திட் டங்களைத் தொடங்கி வைக்கும் அரசு விழா ஜிப்மர் வளாக கலையரங்கில் நேற்று நடந்தது.
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ள சூழலில் பிரதமர் மோடி இந்த அரசு விழாவில் நேற்று பங்கேற்றார். 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வந்திருந்தார். அதே நாளில் மீண்டும் அவர் வந்துள்ளார்.
புதுவை ஜிப்மரில் நடைபெற்ற அரசு விழா அழைப்பிதழில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், வைத்திலிங்கம் விழாவிற்கு வராமல் புறக்கணித்தார்.
ஜிப்மர் அரங்கில் கீழ்தளத்தில் கடும் கட்டுப்பாட்டால் ஏராளமான இருக்கைகள் காலியாக இருந்தன. இதனால் மேல் தளத்தில் இருந்த மருத்துவர்களை கீழே அழைத்து வந்து, அமர வைத்தனர்.
பிரதமர் தடையின்றி பேசுவதற்காக வைக்கப்பட்டிருந்த ‘பிராம்ப்டர்’ கருவியை பலமுறை பரிசோதித்து பார்த்து, சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்தனர்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு புதுவையில் அவர் வரும் வழிகள் நெடுகிலும் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் குலைகளுடன் நட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மோடி வந்து செல்லும் வரை அவர் வரும் வழிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. அப்பகுதிகளில் இருந்த கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன. போக்குவரத்து மாற்றம், நிறுத்தத்தினால் மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
ஜிப்மரில் பிரதமர் மோடி பேசுகையில், ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு மாடல்ல மற்றை யவை’ என்ற வள்ளுவர் எழுதிய திருக்குறளை மேற்கொள் காட்டி பேசி விளக்கம் தந்தார்.
பிரதமர் மோடிக்கு தேசிய விருது பெற்ற வில்லியனூர் கைவினை கலைஞர் முனுசாமியின் புவிசார் குறியீடு பெற்ற டெரகோட்டா பொம்மையை ஆளுநர் தமிழிசை வழங்கினார்.
ஜிப்மரில் விழா அரங்குக்குள் பேனா,கைபைகள், வண்டிச் சாவி ஆகியவை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. 5 கட்ட பரிசோதனைக்குப்பிறகே அனைவரும் அனுமதிக்கப்பட்ட னர். பத்திரிக் கையாளர்கள் வாக்குவாதம் செய்து பேனாவை எடுத்துச் செல்ல அனுமதி பெற்றனர்.
பத்திரிக்கையாளர்கள் கண்டிப் பாக கரோனா பரிசோதனை செய்து,அதன் முடிவுகளை எடுத்து வர உத்தரவிட்டப்பட்டிருந்தது. அதன்படி, பத்திரிக்கையாளர்கள் பரி சோதனை முடிவையும், சுய குறிப்பு விவர படிவத்தையும் பூர்த்தி செய்து எடுத்து வந்தும் யாரும் அதைபற்றி ஒருவார்த்தைக் கூட கேட்காமல் விட்டு விட்டனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகபொதுக்கூட்டம் நடந்த லாஸ்பேட் விமான நிலைய மைதானத்திலேயே நேற்றும் பாஜக பொதுக்கூட்டம் நடந்தது.
லாஸ்பேட்டை விமானநிலையம் செல்லும் வழிகளில் பல இடங்களில் தண்ணீர்பந்தல், மோர் பந்தல் அமைக்கப் பட்டிருந்தது. பஸ், வேன்,கார்களில் புதுச்சேரியின் அனைத்து தொகுதிகளில் இருந்தும், காரைக்காலில் இருந்தும் பொதுமக்கள் அழைத்து வரப்பட்டனர்.
மேடையில், ‘மலரட்டும் தாமரை,ஒளிரட்டும் புதுச்சேரி’ என்ற வாசத்துடன் பேனர் அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஒரு புறம் மோடி, மறுபுறம் தேசிய தலைவர் நட்டா, புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன் மற்றும் புதிதாக கட்சியில் இணைந்த நமச்சிவாயம் படம் பொறிக்கப்பட்டிருந்தது.
பொதுக்கூட்டத்துக்கு வந்த மக்கள் அனைவருக்கும் முகக் கவசம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் வெயிலில் அவதிப்படக்கூடாது என் பதற்காக40 அடி உயரத்தில் இரும்பு தகடால் ஆன கூரை அமைக்கப்பட்டிருந்தது. தனித்தனி பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஆண்கள், பெண்கள் என தனித்தனி யாக அமர வசதி செய்திருந்தனர். ஒவ்வொரு பகுதியிலும் குடிநீர் வசதி செய்யப் பட்டிருந்தது. விவிஐபி, விஐபி, கட்சியினர் என பிரித்து அமரவைக்கப்பட்டனர்.
மேடையில் பிரதமர் மோடியுடன்சேர்த்து 21 இருக்கைகள் அமைக் கப்பட்டிருந்தன.
அண்மையில் கட்சியில் சேர்ந்த நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் ‘நம்மவர்’ என் வாசகம் பொறிக்கப்பட்ட பனியனுடன் ஆயிரக்கணக்கில் வலம் வந்தனர். அதில் மோடி, நட்டா, நமச்சிவாயம் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago