வரும் சட்டப்பேரவைத் தேர் தலில் திமுக கூட்டணியில் இடம்பெறுவதை உறுதி செய்துள்ள காங்கிரஸ், தற்போது தொகுதி பங்கீட்டை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 8 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இந்நிலையில், வரும் சட்டப் பேரவைத் தேர்த லில் குறைந்தது 35 தொகுதிகளையாவது பெற வேண்டும் என அக்கட்சி முயற்சித்து வருகிறது. கடந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க அக்கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: இம்முறை நிச்சயம் 30 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றவர்களுக்கு இம்முறை மீண்டும் வாய்ப்பளிக்க கட்சித் தலைமை முடிவு எடுத்திருக்கிறது. ஏற்கெனவே நின்று தோற்றவர் என்ற அனுதாபத்தில் இம்முறை அவர்கள் வெற்றிபெற வாய்ப்புள் ளது.
அந்த அடிப்படையில் மதுரை வடக்குத் தொகுதியில் மீண்டும் இம்முறை போட்டியிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டுத் தோற்ற கட்சியின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், இம்முறை கட்டாயம் வெற்றிபெறுவேன் என உறுதியளித்து சீட் பெற முயற்சித்து வருகிறார்.
கடந்த முறை வடக்குத் தொகுதியில் இவருக்கு எதிராக போட்டியிட்டு வென்ற அதிமுகவின் வி.வி.ராஜன் செல்லப்பா, இம்முறை திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. எனவே, இம்முறை வடக்கு தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கினால் நாங்கள் வெற்றிபெறுவது உறுதி என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago