ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை திரும்ப பெறாவிட்டால் அரசுக்கு எதிராக பிரச்சாரம் மதுரையில் முகிலன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை திரும்ப பெறாவிட்டால் தேர்தலில் தமிழக அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்வோம் என சூழலியல் ஆர்வலர் முகிலன் கூறினார்.

மதுரை அலங்காநல்லூர், தல்லாகுளம் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு மீட்பு போராட்டம் தொடர்பாக சூழலியல் ஆர்வலர் முகிலன் உட்பட 63 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மதுரை ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. முகிலன் உள்ளிட்ட 7 பேர் ஆஜராகினர். பின்னர் விசாரணை மார்ச் 25-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் முகிலன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு 26 ஆயிரம் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை ரத்து செய்து இருப்பதாக கூறியது வெற்று அறிவிப்பு. இந்த வழக்குகள் அனைத்தும் மூன்று ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. இதனால் தானாகவே இந்த வழக்குகள் ரத்தாகி விடும். இருப்பினும் இந்த வழக்குகளை ரத்து செய்வதாக தமிழக அரசு நாடகமாடி வருகிறது.

சிபிசிஐடி போலீஸார் பதிவு செய்த எந்த வழக்கும் ரத்து செய்யப்படவில்லை. எனவே ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை உண்மையிலேயே ரத்து செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை ரத்து செய்யாவிட்டால் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்க மக்களிடம் பிரச்சாரம் செய்வோம். இவ்வாறு முகிலன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்