சொந்த கட்டிடம், உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்த சேலம் அரசு அருங்காட்சியகத்துக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

By செய்திப்பிரிவு

தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் சேலம் மாவட்ட அரசு அருங்காட்சியகத்துக்கு சொந்த கட்டிடம் கட்டவும், உள்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சேலம், கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட அரசு அருங்காட்சியங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 50 சென்ட் அரசு நிலத்தில் புதிய கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்காக ரூ.16 கோடி நிதி ஒதுக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழ்ஆட்சி மொழி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிவித்தார். இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் முதல்கட்டமாக தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் சேலம் மாவட்ட அருங்காட்சியகத்துக்கு புதிய கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி மாற்றியமைப்பதற்காக ரூ.5 கோடிக்கு நிர்வாக அனுமதி அளித்து சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள்துறை ஆணையிட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்