புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவ கல்லூரி கட்டுமான பணி தொடக்கம்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி அருகே ரூ.63 கோடியில் அரசு பல் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவக் கல்லூரி அமைக்க அரசு மருத்துவக் கல்லூரி அருகே 10.14 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தில் அரசு பல் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் நேற்று நடைபெற்றது.

பல் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டி, மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது: இங்கு 4,754 சதுர மீட்டரில் முதல்வர் அறை, வகுப்பறை, ஆய்வகம், கூட்ட அறை, பணியாளர்கள் அறை, பல் மருத்துவ அறை, தேர்வு அறை போன்ற வசதிகளுடன் பல் மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது.

மேலும், புறநோயாளிகள் பிரிவு, மருந்தகம், வகுப்பறை போன்ற வசதிகளுடன் 6,140 சதுர மீட்டரில் அரசு பல் மருத்துவமனையும் அமைய உள்ளது. இதுவிர, பல் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு தனியாகவும், பணியாளர்களுக்கு தனியாகவும் குடியிருப்பு கட்டப்பட உள்ளது. மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதிகளும் கட்டப் பட உள்ளன. இக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமானப் பணி கள் விரைந்து முடிக்கப்பட்டு, பயன் பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மருத்துவர்கள், செவிலியர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில் ரூ.13 கோடியில் பயிற்சி மையம் கட்டப்பட உள்ளது.

மேலும், புதுக்கோட்டை முத்துலட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா போன்ற பிரிவுகளுக்குத் தேவையான மருந்துகளை தயா ரிக்கும் டாம்கால் 2-வது மருந்து உற்பத்தி பிரிவும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி, அரசு பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் பிரேம்குமார், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் நித்தியானந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்