புதுச்சேரி, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ளது போல, தமிழ்நாட்டிலும் மாதாந்திர உதவித் தொகையாக மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,000, கடும் பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,000 வீதம் வழங்க வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத பணியிடங்களை தமிழ்நாடு அரசு உறுதி செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் பிப்.23-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர்.
போராட்டத்தின் 3-வது நாளான நேற்று சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.கோபிநாத் தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். சங்கத்தின் கிழக்குப் பகுதி தலைவர் ஜெ.அந்தோனி சேகர், செயலாளர் வி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago