பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பார்வை யற்ற மாற்றுத்திறனாளிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.

ஆர்ப்பாட்டத்தை மனோகரன், சந்திரசேகர், மாரிமுத்து, குப்புசாமி ஆகியோர் ஒருங்கி ணைத்தனர். இதில், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.1,000-லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் இந்த உதவித் தொகையை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்கடை வைத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்