திருப்பத்தூரில் அனைத்து வகையான வியாபாரத்துக்கும் தொழில் உரிமத்தை இம்மாத இறுதிக்குள் கட்டாயம் பெற வேண்டும் என நகராட்சி ஆணை யாளர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் நகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் இயங்கி வரும்மளிகை கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், ஜவுளி மற்றும் நகைக்கடைகள், பாத்திரக்கடை கள் உள்ளிட்ட அனைத்து வகையான தொழில்களுக்கும் நகராட்சி நிர்வாகத்திடம் ‘டி அண்ட் ஓ’ என அழைக்கப்படும் தொழில் உரிமம் பெற வேண்டும் என்பது விதிமுறை.
இந்த உரிமம் அனைத்து வகையான வியாபாரிகளும் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் செயல்பட்டு வரும் பெரும்பாலான கடைகள் தொழில் செய்வதற்கான உரிமம் இல்லாமலேயே வியாபாரம் செய்து வருவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, இம்மாத இறுதிக்குள் தொழில் உரிமம் பெற வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவித் துள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணை யாளர் சத்தியநாதன் செய்தி யாளர்களிடம் கூறும்போது, “ திருப் பத்தூர் நகராட்சிக்குட்பட்ட இடங்களில் மொத்தம் 5,375 கடைகள் உரிமம் இல்லாமல் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுவரை தொழில் உரிமம் பெறாதவர்கள் நகராட்சி சுகாதாரப் பிரிவில் விண்ணப்பித்து உடனடியாக உரிமம் பெற வேண்டும்.
ஏற்கெனவே உரிமம் வாங்கிய வர்கள் அதை இம்மாதம் 28-ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். உரிமம் வாங்கவோ, புதுப்பிக்கவோ தவறியவர்கள் 25 சதவீத அபராத தொகை செலுத்த நேரிடும்.
அதையும் மீறி செலுத்தா விட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago