கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித வளர்ச்சியும் இல்லாமல் தமிழகம் இருண்டு கிடக்கிறது என மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப் பினர் தயாநிதி மாறன் கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்த தயாநிதி மாறனை, மாராப்பட்டு பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் தேவராஜ் வரவேற்றார்.
இதையடுத்து, கோணாமேடு பகுதிக்கு வந்த தயாநிதி மாறனுக்கு நகர பொறுப்பாளர் சாரதிகுமார் வரவேற்பு அளித்தார். கோணாமேடு பகுதியைச் சேர்ந்த மூத்த நிர்வாகி மணி என்பவர் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார்.
இதைத்தொடர்ந்து, வாணியம் பாடி நியூ டவுன் பகுதியில் உள்ள இஸ்லாமியா கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, கல்லூரி மாணவர்கள் ‘‘வாணியம்பாடியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண் டும். வேலை வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, மாணவர் களிடம் பேசிய தயாநிதி மாறன், ‘‘தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு களாக படித்த இளைஞர்களுக்கு அதிமுக அரசு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவில்லை.
பிரபல கார் நிறுவனம் உதிரிபாகங்களை தயாரிக்க தமிழ கத்தில் தொழிற்சாலை திறக்க அனுமதி கேட்டது, அதிமுக அரசு அதற்கு லஞ்சம் கேட்டதால் அந்த தொழிற்சாலை தற்போது ஆந்திர மாநிலத்துக்கு சென்றுவிட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. தமிழகம் இருண்டு கிடக்கிறது. இதற்காகத்தான் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற நிகழ்ச்சியை திமுக நடத்தி வருகிறது. விரைவில் ஆட்சி மாற்றம் வரும், தமிழகம் முன்னேற்றப்பாதைக்கு செல்லும்’’ என்றார்.
இதைத்தொடர்ந்து, வாணியம் பாடி நியூடவுன் பகுதியில் பொது மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். பின்னர், ராமநாயக்கன்பேட்டை பகுதியில் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற் சாலை மற்றும் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்களிடம் அவர் கலந்துரையாடினார்.
பின்னர், உதயேந்திரம் பேரூராட்சியில் கிறிஸ்தவ மதபோதகர்களுடன் சந்திப்பு, தனியார் திருமண மண்டபத்தில் முத்தவல்லிகள், தொழில் முனைவோர்களுடன் அவர் கலந்துரை யாடினார். இரவு வாணியம்பாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago