வாக்கு இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்து பயிற்சி

வரும் சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி, சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங் களைப் பயன்படுத்துவது குறித்து தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

உதவி தேர்தல் அலுவலர்கள் மூலம், அந்தந்த தொகுதிகளில் பணிபுரியும் தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதுடன், பொது இடங்களில் வாக்குப்பதிவு இயந்தி ரங்களை வைத்து, வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவிஅதிகாரிகள் கூறும்போது, "ஒவ்வொரு தொகுதியிலும் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் 5 சதவீத இயந்திரங் களைப் பயன்படுத்தி பயிற்சி மற்றும் மக்களுக்கான விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

மொத்தம் 10 நாட்களுக்கு உதவி தேர்தல் அலுவலர்கள் மூலம் இப்பயிற்சி நடத்தப்பட உள்ளது.

இதற்காக மேட்டுப்பாளையம் தொகுதியில் 21, சூலூர் தொகுதியில் 23, கவுண்டம்பாளையம் தொகுதியில் 34, கோவை வடக்கு தொகுதியில் 25, தொண்டாமுத்தூர் தொகுதியில் 24, கோவை தெற்கு தொகுதியில் 18,சிங்காநல்லூர் தொதியில் 22, கிணத்துக்கடவு தொகுதியில் 24, பொள்ளாச்சி தொகுதியில் 10, வால்பாறை தொகுதியில் 15 இயந்திரங்கள் என மொத்தம் 222 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE