சாலையில் கிடந்த 25 பவுன், ரூ.4 லட்சத்தை ஒப்படைத்த தொழிலாளிக்கு பாராட்டு

By செய்திப்பிரிவு

சேலம் அருகே சாலையில் கிடந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் பணத்தை ஊராட்சி தலைவர் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த சலவைத் தொழிலாளியை போலீஸார் பாராட்டினர்.

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுகுமார் (70). இவர் மர வியாபாம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தாதகாப்பட்டியில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது, பையில் 25 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றார்.

சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் சாலையில் கடந்த நிலையில், வண்டியில் வைத்திருந்த நகை பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். உடனே, அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அப்போது, அன்னதானப்பட்டி காவல் நிலையத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பில் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் பேசினார். சீலநாயக்கன்பட்டி பை-பாஸில் கிடந்த பையை சலவைத் தொழிலாளி ரமேஷ் என்பவர் எடுத்து வந்து தன்னிடம் கொடுத்ததாகவும், அதில் 25 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கம் இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து, அங்கு சென்று பையை பெற்ற போலீஸார் சுகுமாரிடம் வழங்கினர். நகை மற்றும் பணத்தை ஒப்படைந்த ரமேஷை போலீஸார் பாராட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்