திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நேற்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று காலை சந்திரசேகரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரங்களும் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, காலை 9 மணியளவில் சந்திரசேகரர் சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

26-ம் தேதி (நாளை) திருக்கல்யாணம், 27-ம் தேதி கொடி இறக்கம், 28-ம் தேதி தியாகராஜ சுவாமி பந்தம்பறி உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைய உள்ளது.

பிரம்மோற்சவ விழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சூரிய பிரபை, சந்திர பிரபை, நந்தி வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாக்கள் நடைபெற்று வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்