ஓய்'ஸ் மென் இன்டர்நேஷனல் அமைப்பில் இந்துஸ்தான் பல்கலைக்கழக இணை வேந்தருக்கு புதிய பொறுப்பு

By செய்திப்பிரிவு

ஒய்'ஸ் மென்'ஸ் கிளப்ஸ் சர்வதேச சங்கம் 1922-ம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்காக உலக ஒய்எம்சிஏ, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலகளாவிய நிதியத்துடன் இணைந்து செயல்படுகிறது.

ஓய்'ஸ் மென் இன்டர்நேஷனல் அமைப்பின் 2021-22-ம் ஆண்டுக்கான சர்வதேச கவுன்சில் உறுப்பினராக, இந்துஸ்தான் பல்கலைக்கழக இணை வேந்தரும், இந்துஸ்தான் குழும கல்வி நிறுவனங்களின் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தென்னிந்திய பிராந்தியத்தின் பிரதிநிதியாக செயல்படுவார்.

ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ் ஏற்கெனவே 2016 முதல் 2018 வரை மயிலாப்பூர் பகுதி ஒய்'ஸ் மென்'ஸ் கிளப் உறுப்பினராகவும், தென்னிந்திய பிராந்திய இயக்குநராகவும் பொறுப்பு வகித்து, சிறந்த பிராந்திய இயக்குநர் என்ற விருதை பெற்றுள்ளார்.

தற்போது இவர் இந்திய பகுதியின், தலைமை பகுதி ஒருங்கிணைப்பாளராகவும் ஒய்'ஸ் மென் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச நூற்றாண்டு கொண்டாட்டக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்