வணிகர் மேம்பாட்டுக்கான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்படவில்லை வணிகர் பேரமைப்பு குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில், எந்த வகையிலும் நசிந்து போன தொழில்களை மீட்டெடுக்கவோ, வணிகத் துறையை மேம்படுத்தவோ எந்தவித நிதி ஆதரமும் ஒதுக்கப்படவில்லை. 1 லட்சத்து 35 ஆயிரம் கோடி ஆண்டு வருவாயாக கணக்கிட்டு, 41 ஆயிரம் கோடி நிதிப் பற்றாக்குறை என்று பட்ஜெட் வெளியிட்டுள்ள நிலையில், குறைந்தபட்ச தொகையைக்கூட பொருளாதாரத்தின் முதுகெலும்பாய் இருக்கும் தொழில் மற்றும் வணிகத் துறைக்கு ஒதுக்காமல், வணிகர் நலனில் அக்கறை கொள்ளாமல், பட்ஜெட் அறிக்கை நீண்டிருக்கிறது.

எதிர்பார்ப்புகள் எல்லாம் பொய்த்துப்போன நிலையில், எதிர்வரும் காலம் எல்லோருக்கும் வாய்ப்பு வழங்கிட உரிய தருணத்தை அளிக்கும் என்ற நம்பிக்கையோடு வணிகர்கள் வாழ்ந்து வருகின்றனர். வணிகத்தை மீட்டெடுக்க வணிகர் நலன் காக்க, அரசின் பட்ஜெட்டில் மாற்றங்கள் வேண்டி, இந்த பேரமைப்பு போராடும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்