மதுரை காமாஜர் பல்கலைக்கழக பதவி உயர்வு முறைகேடு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதவி உயர்வு முறைகேடு தொடர்பான விசாரணை அறிக் கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை எஸ்.எஸ்.காலனி யைச் சேர்ந்த லயோனல் அந்தோணி ராஜ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

காமராஜர் பல்கலை.யில் மே 2017 முதல் ஜூன் 2018 வரை செல்லத்துரை துணைவேந்தராக இருந்தபோது தகுதியற்ற பலருக்கு உதவிப் பேராசிரியர், பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த முறைகேடு குறித்து உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர்அலி குழு விசாரித்தது.

இந்தக் குழு விசாரணை நடத்தி பதவி உயர்வு வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக அறிக்கை அளித்தது. இந்த அறிக்கை அடிப்படையில் முறைகேட்டில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க துணை வேந் தருக்கு சிண்டிகேட் அதிகாரம் வழங்கியது. இருப்பினும் இது வரை நடவடிக்கை இல்லை.

எனவே, பதவி உயர்வு முறை கேட்டில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்கவும், முறை கேடாக வழங்கப்பட்ட பதவி உயர்வுக்கு தடை விதித்தும், உயர் மட்டக்குழு அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா அமர்வில் விசாரணை க்கு வந்தது. பல்கலை. தரப்பில், உயர்மட்டக் குழு அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை துணை வேந்தருக்கு சிண்டிகேட் கொடுத்துள்ளது. அவர், புகாரில் சம்பந்தப்பட்டோரின் சான்று மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வுக்குழு அறிக்கை அடிப்படையில் உரிய நட வடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பதவி உயர்வு முறைகேடு தொ டர்பாக எடுக்கப்பட்ட நட வடிக்கையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்