திருமங்கலம் அருகே ரூ.15 கோடி முறைகேடு அரசியல் பிரமுகர் மகன் உட்பட 4 பேர் கைது

By செய்திப்பிரிவு

திருமங்கலம் அருகே வெளிநாட்டு நிறுவனத்தில் ரூ.15 கோடி முறைகேடு செய்தது தொடர்பாக, அரசியல் பிரமுகர் மகன்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப் பட்டனர்.

அயர்லாந்து நாட்டைச் சேர் ந்தவர் அமந்தா மர்பி. இவருக்கு மகன், 2 மகள்கள் உள்ளனர். அமந்தா மர்பி 1992-ல் ஆலங்குளத்தில் எக்ஸ்போர்ட் நிறுவனத்தைத் தொடங்கினார். இவரது மகன் லண்டனிலும், மகள்கள் கொடைக்கானலிலும் படித்தனர். கணவர் இறந்த நிலையில், 2014-ல் மகள்களுடன் கொடைக்கானலில் தங்கினார்.

இதனால் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருந்த திருமங்கலம் பொடா நாகராஜன் என்பவரின் மகன் கவாஸ்கர் உட்பட ஊழியர்களை நம்பி நிர் வாகத்தின் முழுப் பொறுப்பையும் அவர்களிடம் ஒப்படைத்தார்.

2015 முதல் மகன், மகள்களுடன் லண்டனுக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டார். நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்புகளை கவாஸ்கர், ஆடிட்டர்கள் பாஸ் கரன், கொண்டப்பன் உள்ளிட்டோர் கவனித்தனர்.

அவ்வப்போது, லண்டனில் இருந்து அமந்தா மர்பி, அவரது மகன், மகள்கள் ஆலங்குளத்துக்கு வந்து சென்றனர். நிர்வாகத்தின் வரவு-செலவில் முறைகேடு நடந்திருப்பதாகச் சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் ஆடிட்டர் ஒருவர் மூலம் நடத்திய ஆய்வில், ‘டெடி’ குரூப் ஆப் நிறுவனங்களில் ரூ. 15 கோடி வரை முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.

இதன்மூலம் கவாஸ்கர், அவரது பெற்றோர், சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள் பேரில் சொத்துகள் வாங்கியதும் தெரிந்தது.

இது தொடர்பாக அமந்தா மர்பி திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கவாஸ்கர், அவரது தந்தை பொடா நாகராஜன், சகோதரர் ரோகன் மற்றும் நிறுவன ஆடிட்டர்கள் பாஸ்கரன், கொண்டப்பன் மற்றும் ஊழியர்கள், உறவினர்கள் உட்பட 17 பேர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் கவாஸ்கர், சகோதரர் ரோகன், கணக்காளர் பாஸ்கரன், ஜெகதாளன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்