வந்தவாசியில் உலக தாய்மொழி தின விழா

By செய்திப்பிரிவு

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில், உலக தாய்மொழி தின விழா திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்றது.

வந்தை கோட்டை தமிழ் சங்கத் தலைவர் பீ.ரகமத்துல்லா தலைமை வகித்தார். சங்க உறுப்பினர் ம.பெ.வெங்கடேசன் வரவேற்றார். தமிழ் மொழி குறித்த இசைப்பாடலை கவிஞர் சு.அகிலன் பாடினார். கவிஞர் மு.முருகேஷ், செயலாளர் பா.சீனிவாசன், வயலாமூர் வீ.கிருஷ்ணன், தமிழ் ஆசிரியர் வீரராகவலு, க.புனிதவதி ஆகியோர் தாய்மொழி தினத்தின் சிறப்புகளை விளக்கிப் பேசினர்.

திருவண்ணாமலை புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்ற மாநில துணைச் செயலாளர் பாவலர் வையவன் பேசும்போது, “நம் குழந்தைகளுக்கு தமிழ் மொழியிலேயே பெயர் சூட்டப்பட வேண்டும்” என்றார்.

விழாவில், “உலகப் பொதுமறையாம் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயரை சூட்ட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது. ‘தமிழை நேசிப்போம்’ என்ற தலைப்பில் கவிஞர்கள் மு.அப்துல்லா, தமிழ்ராசா, ல.செல்வராஜ், சா.ரஷீனா, ஷமீமா ஆகியோர் கவிதை வாசித்தனர். வந்தவாசி அடுத்த கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவி ஆ.தர்ஷினி, 1,330 திருக்குறளை ஒப்புவித்ததைப் பாராட்டி, பரிசு வழங்கப்பட்டது. இறுதியில், தமிழ் சங்க துணைச் செயலாளர் கு.சதானந்தன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்