பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து, எஸ்டிபிஐ கட்சியின் எஸ்டிடியூ தொழிற்சங்கத்தினர் கோவையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை உக்கடம் ஆத்துப்பாலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, எஸ்டிபிஐ மாவட்டத் தலைவர் ராஜா உசேன் தலைமை வகித்தார். அவர் கூறும்போது, ‘‘அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து, மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் மேலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கரோனா தொற்று காரணமாக பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீள வழி இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கும் சூழலில், இதுபோன்ற நெருக்கடிகள் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்குகின்றன. எனவே, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
மனிதநேய மக்கள் கட்சி சார்பில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல, திருப்பூர் அறிவொளி சாலை பகுதியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜாமுகமது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago