பன்னாட்டு கருத்தரங்கு

By செய்திப்பிரிவு

கஸ்தூரிபா, தில்லையாடி வள்ளி யம்மை நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை பாத்திமா கல்லூரியின் வரலாற்றுத் துறை, காந்தி நினைவு அருங் காட்சியகம் ஆகியவை இணைந்து பன்னாட்டுக் கருத் தரங்கை நடத்தின.

தில்லையாடி வள்ளியம்மை குறித்து யாழ்ப்பாண தமிழ்ச் சங்க துணைத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி பேசுகையில் "தன்னம்பிக்கை, சுயமரியாதை, நல்லொழுக்கம் ஆகியவையே தில்லையாடி வள்ளியம்மை வாழ்க்கை நமக்கு அளிக்கும் செய்தி" என்றார்.

கஸ்தூரிபாய் தியாகத்தின் பாதையில் என்னும் தலைப்பில் திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக் கல்லூரி முன் னாள் தமிழ்த் துறைப் பேராசிரியர் சரோஜினி புதியவன் பேசினார்.

வரலாற்று துறைத் தலைவர் பேராசிரியர் சாராள் இவாஞ்சலின் வரவேற்றார். பேராசிரியர் முத்துலட்சுமி, அருங்காட்சியக இயக்குநர் கே.ஆர்.நந்தாராவ், கல்வி அலுவலர் ஆர்.நடராஜன், உதவிப் பேரா சிரியை விஜயசாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்