சட்டப்பேரவைத் தேர்தலையடுத்து, ஈரோடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில எல்லையோர சோதனைச் சாவடிகளைப் பலப்படுத்துவது தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, எஸ்பி பி.தங்கதுரை, கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் டிஎஸ்பி பிரியதர்ஷினி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளபோது, ஈரோடு மாட்டத்தில் ஏற்கெனவே உள்ள ஆசனூர் மது விலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு சோதனைச் சாவடி, போக்குவரத்துத்துறையின் பண்ணாரி சோதனைச் சாவடி மற்றும் வனத்துறையின் சோதனைச் சாவடிகள் காரப்பள்ளம், கேர்மாளம் மற்றும் மகாராஜபுரம் ஆகியவைகளையும், கர்நாடக எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளையும் பலப்படுத்துவது குறித்தும், கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இரு மாநிலங் களிடையே, மதுபானங் கள் அனுமதியின்றி கொண்டு செல்வதையும், மேற்படி சோதனைச் சாவடிகளில் உள்ள காவல் துறை மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை வெளியானவுடன் சோதனைச் சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும், இரு மாநில காவல்துறையினர் கூட்டாக ஒருங்கிணைந்து மதுபான குற்றங்களைத் தடுப்பதற்கு விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago