449 துணை வாக்குச்சாவடிகள் நெல்லை மாவட்டத்தில் உதயம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் 1050-க்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடிகளை பிரித்து அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வே.விஷ்ணு தலைமையில் நடை பெற்றது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்த விவரங்கள்:

1050-க்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்டுள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து துணை வாக்குச்சாவடிகளை அமைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி தொகுதியில் 100, அம்பாசமுத்திரத்தில் 62, பாளையங்கோட்டையில் 121, நாங்குநேரியில் 96, ராதாபுரத் தில் 70 என்று மொத்தம் 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 449 வாக்குச்சாவடிகள் 1050-க்கும் அதிகமான வாக்காளர்களை கொண்டுள்ளன.

இதன்மூலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,475 வாக்குச் சாவடிகளுடன், மேலும் 449 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதனால் மொத்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 1,924 ஆக உள்ளது. பிரிக்கப்பட்டுள்ள துணை வாக்குச்சாவடிகள், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் ஆலோ சனையின்பேரில் பிரிக்கப் பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், சார் ஆட்சியர்கள் சிவகிருஷ்ணமூர்த்தி, பிரதீக் தயாள், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்