குமரி மாவட்டம், பழையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் நகராட்சி நிர்வாகம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி சிஎஸ்ஐ பேராயர் செல்லையா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: குமரி மாவட்டம், சிஎஸ்ஐ திருச்சபைக்குச் சொந்த மான ஏராளமான நிலங்கள், நிறுவனங்கள் உள்ளன.
தாமரைகுளம் கிராமத்தில் பழையாற்றின் குறுக்கே தடுப்பாணை கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இங்கு தடுப்பணை கட்டுவதால் நீர் தேங்கி ஆற்றுப்படுகை அருகே யுள்ள நிலங்களில் பயிர்கள் சேதமடையும். புதிய தடுப்பணை கட்டுவதற்கு முறையாக எவ்வித டெண்டர் அறிவிப்பும் விடப்படவில்லை. எனவே, தடுப்பணை கட்டத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி பார்த்திபன் விசாரித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago