குனியமுத்தூரில் ரூ.71.68 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்

By செய்திப்பிரிவு

கோவை குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளில் 2 முதல் 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கும் வகையில் அம்ருத் திட்டத்தில் குறிச்சியில் ரூ.93.75 கோடியிலும், குனியமுத்தூரில் ரூ.71.68 கோடியிலும் மேல்நிலைத் நீர்தேக்கத் தொட்டிகள் கட்டுதல், குடிநீர் பகிர்மானக் குழாய்கள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘குனியமுத்தூர் திட்டம் மூலம் தினமும் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில், கோவைப்புதூர்பிரிவு அருகே 35.02 எம்.எல்.டி. அளவுக்கு சிறுவாணி குடிநீர் எடுக்கப்பட்டு, அங்கிருந்து 15.20 கிலோமீட்டர் தொலைவுக்கு குழாய்கள் மூலம் கொண்டுவந்து, நீர்த்தேக்கத் தொட்டிகளில் சேகரித்துவைத்து, பொதுமக்களுக்கு விநியோகிக் கப்படும்.

அதேபோல, குறிச்சியில் ரூ.93.75 கோடியில் மேற்கொள்ளப்படும் குடிநீர் திட்டப் பணிக்காக, 11 இடங்களில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன" என்றனர்.

இந்நிலையில், குனியமுத்தூரில் ரூ.71.68 கோடியிலான குடிநீர் திட்டப் பணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தொடங்கிவைத்து, சுண்டக்காமுத்தூர் அன்புநகரில் ரூ.75.64 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலைத் நீர்தேக்கத் தொட்டியைத் திறந்து வைத்தார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராம.துரைமுருகன், மாநகராட்சி துணை ஆணையர் மதுராந்தகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்