நீண்ட நேரம் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள், திடீரென ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் அருகே அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் கூறும்போது, ‘‘நேர்காணல் என்ற பெயரில் எங்களை நாள் முழுவதும் காக்க வைக்கின்றனர். எனவே, நேர்காணலின்றி ஸ்மார்ட் போன் வழங்க வேண்டும் அல்லது விண்ணப்பதாரர்களை பகுதி பகுதியாக நேர்காணலுக்கு அழைக்க வேண்டும்’’ என்றனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி, அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago