பணி நிரந்தரம் செய்ய மின் வாரிய ஒப்பந்தப் பணியாளர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் கு.ராசாமணியிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

தமிழ்நாடு மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தினர் அளித்த மனுவில், “தொழிற் சங்கத்துடன் அரசு நடத்திய பேச்சு வார்த்தையில், ஒப்பந்தப் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.380 தினக்கூலி வழங்கப்படும், பணி நிரந்தரம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் எங்களது ஆதார் அட்டை,வாக்காளர் அடையாள அட்டை களை அரசிடம் திரும்ப ஒப்படைப் போம்’’ என்று தெரிவித்திருந்தனர்.

அரசு மருத்துவமனைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற் றும் ஆய்வகப் பணியாளர்கள் அளித்த மனுவில், “கோவை அரசு தலைமை மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்களில், தற்காலிக அடிப்படையில் 30 ஆய்வகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், எங்களை பணியிலிருந்து விடுவிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். கரோனா அச்சுறுத்தலைக் கடந்து பணிபுரிந்த எங்களுக்கு தொடர்ந்து பணி வழங்க வேண்டும். அல்லது காலிப் பணியிடங்களை நிரப்பும்போது, எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்