திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், தேனி, பெரம்பலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவு சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. தவிர கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு வெங்காயம் அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் அறுவடை நேரத்தில் பெய்த தொடர் மழையால் வெங்காயப் பயிர்கள் அழுகின. இதனால் வரத்து குறைந்து சின்ன வெங்காயம் விலை உயர்ந்தது. இதையடுத்து காரைக்குடி தினசரி சந்தையில் கிலோ ரூ.140 வரை விற்றது. இந்நிலையில் நேற்று காரைக்குடி சந்தைப்பேட்டை வாரச்சந்தையில் திடீரென சின்ன வெங்காயம் கிலோ ரூ.80-க்கு விற்றது. ரூ.60-க்கு விற்ற பெரிய வெங்காயம் ரூ.40-க்கும், ரூ.60-க்கு விற்ற கத்திரிக்காய் ரூ.20-க்கும், ரூ.60-க்கு விற்ற உருளை ரூ.30-க்கும், ரூ.30-க்கு விற்ற தக்காளி ரூ.20-க்கும், ரூ.80-க்கு விற்ற வெண்டை ரூ.40-க்கும் விற்பனையாது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘வெளிமாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்து வருகிறது,’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago