மதுரை மாவட்டம், திருமங் கலத்தைச் சேர்ந்தவர் பொடா நாகராஜன். முன்னாள் மதிமுக பிரமுகர். இவரது மகன் கவாஸ்கர் மீது பண முறைகேடு தொடர்பாக திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் பிரபல நிறுவனம் சார்பில் சில நாட்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கவாஸ்கரை டிஎஸ்பி வினோதினி தலைமையிலான தனிப்படையினர் பிடித்தனர். அவரை தாலுகா போலீஸார் திருமங்கலம் அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.
மேலும் இப்புகார் தொடர்பாக லெனின் என்பவரையும் பிடித் துள்ளனர்.
இது குறித்து போலீ ஸாரிடம் கேட்டபோது, ‘பல கோடி ரூபாய் முறைகேடு தொடர் பாக கவாஸ்கருக்கு எதிரான புகார் உண்மைதான். அது குறித்து பல்வேறு ஆவணங்கள் அடிப்படையில் 2 பேரிடம் விசாரிக்கிறோம். புகார் உண்மை எனத் தெரியும்பட்சத்தில் கைது நடவடிக்கை இருக்கும்’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago