சட்டம், ஒழுங்கை பாதுகாக்க முக்கியத்துவம் நெல்லையில் புதிய ஆணையர் அன்பு தகவல்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர் சென்னை சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுஐஜியாக இருந்த அன்பு, திருநெல்வேலி மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 2015-16ல்நெல்லை ஆணையராகநான் பணியாற்றி உள்ளேன். இரண்டாவது முறையாக நெல்லை மாநகர காவல் ஆணையராக பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. காவல்துறை மக்களின் நெருங்கிய நண்பனாக இருக்கும். திருநெல்வேலி மக்களின் பாதுகாப்புக்காக நெல்லை காவல்துறை சிறந்து பணியாற்றும்.

தமிழ்நாடு காவல்துறையின் திறமை உயர்ந்துகொண்டே உள்ளது. மக்களின் நண்பனாக திகழ நெல்லைமாநகர காவல்துறை பல்வேறுமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதை தொடர்ந்து செயல்படுத்தி, மக்களுக்கு பாதுகாப்புஅளிக்க திறமையாக செயல்படும். பொதுமக்கள் பயமின்றி காவல்நிலையத்தில் தங்கள் புகார்களைதெரிவிக்கலாம் புகார்களின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டம், ஒழுங்கை பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். தேர்தலில்பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதேபோல், திருநெல்வேலி மாநகர துணை ஆணையராக இருந்த சரவணன் தூத்துக்குடி காவலர் தேர்வுப் பள்ளி முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டார். அரியலூர் மாவட்ட எஸ்பியாக இருந்த னிவாசன் திருநெல்வேலி மாநகர துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். அவரும் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்