சர்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்தியை அதிகரித்து வாகனங்களுக்கு மலிவு விலையில் வழங்க வலியுறுத்தி உழவர் பேரவை சார்பில், தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று நூதனப் போராட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற நூதனப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசும்போது, “பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் விவசாயிகளின் கோரிக் கையை அரசியல் கட்சிகள், தங்களது தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும். கிராமப்புற பொருளா தாரம் உயர, வீட்டு உபயோக காஸ் சிலிண்டருக்கு மாற்றாக சாண எரிவாயு அடுப்பு (பயோகாஸ்) வழங்க வேண்டும். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை ஒவ்வொரு குடும்பத்துக்கும் செலவு கட்டுப்படுத்தப்படும்.
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளுக்கு மாற்றாக கரும்பு மொலாசஸ் மூலம் எரிசாராயம் தயாரிப்பதை கட்டுப்படுத்தி, ஒவ்வொரு கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் ‘எத்தனால்’ தயாரித்து, வாகனங்களுக்கு மலிவு விலையில் வழங்க வேண்டும். இதனால், கரும்பு விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் லாபம் பெறுவார்கள். மேலும் காற்று மாசு ஏற்படுவதும் தடுக்கப்படும். இதுபோன்ற செயல்கள் மூலம் கிராம பொருளாதாரம் கண்டிப்பாக மேம்படும். அந்நிய செலாவணியும் குறைக்க முடியும்” என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில், மாவட்டச் செயலாளர் சிவா, விவசாயிகள் பாலகிருஷ்ணன், சம்பத், சின்ன பையன், அழகேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆட்சியருக்கு நன்றி
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த கார்கோணம் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு, உறுதுணையாக இருந்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் ஆகியோருக்கு கார்கோணம் மக்கள் சார்பாக விவசாயிகள் நன்றியை தெரி வித்துக் கொண்டனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago