உ.வே.சா பிறந்த நாள், கவிதை நூல் வெளியீட்டு விழா

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் சங்க இலக்கிய ஆய்வு நடுவம் மற்றும் சிங்கப்பூர் நம் தமர் ஊரன் இலக்கிய ஆராய்ச்சி மையம் சார்பில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் பிறந்த நாள் விழா, உவேசா விருது வழங்கும் விழா மற்றும் கவிதை நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு, அரியலூர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் க.தமிழ்மாறன் தலைமை வகித்தார். திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி முதல்வர் இ.ஆர்.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக அயல்நாட்டுத் தமிழ் கல்வித்துறைத் தலைவர் இரா.குறிஞ்சிவேந்தன் சிறப்புரையாற்றினார். பெரம்பலூர் வரலாற்று ஆய்வாளர் ஜெயபால் ரத்தினம் உ.வே.சாமிநாதய்யரும், பெரம்பலூர் மாவட்டமும் எனும் தலைப்பில் பேசினார்.

எம்எல்ஏக்கள் குன்னம் ஆர்.டி.ராமச்சந்திரன், பெரம்பலூர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் கவிஞர் த.மகேஸ்வரி செல்வ குமார் எழுதிய ‘தவறவிட்ட நேசங்கள்’ எனும் கவிதை நூலை வெளியிட்டனர்.

தொடர்ந்து, சென்னை ராணிமேரி கல்லூரி பேராசிரியர் கமலா முருகன், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் மு.முனீஸ் மூர்த்தி, தமிழியல் ஆய்வாளர் பே. சக்திவேல் உட்பட 15 பேருக்கு தமிழ்த் தாத்தா உ.வே.சா விருது வழங்கப்பட்டது.

முன்னதாக, சங்க இலக்கிய ஆய்வு நடுவத் தலைவர் சே.சுரேஷ் வரவேற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்