தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி தனியார் மருத்துவமனை முற்றுகை காவல் துறையினர் பேச்சுவார்த்தை

By செய்திப்பிரிவு

தி.மலையில் தவறான சிகிச்சையால் கூலித் தொழிலாளி உயிரிழந்துவிட்டதாக கூறி தனியார் மருத்துவமனையை உறவினர்கள் நேற்று முற்றுகை யிட்டனர்.

தி.மலை மாவட்டம் தண்டராம் பட்டு அடுத்த தானிப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சம்பத்(45). இவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், தி.மலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 17-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது மூளையில் ரத்தக்கசிவு இருப்பதாகக் கூறி, கடந்த 18-ம் தேதி அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது.

அதன்பிறகு, அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், மற்றொரு தனியார் மருத்துவ மனைக்கு நேற்று முன்தினம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று சம்பத் உயிரிழந்தார். இதனால் ஆத்திர மடைந்த அவரது உறவினர்கள், அறுவை சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனையை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், தவறான சிகிச்சையால் சம்பத் உயிரிழந்துள்ளதாகவும், சம்பந் தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த தி.மலை நகர காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடதை்தினர். அப்போது, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை யடுத்து, முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்