பென்னாத்தூர், தார்வழி கிராமங்களில் எருது விடும் விழா

By செய்திப்பிரிவு

அணைக்கட்டு அருகே தார்வழி மற்றும் பென்னாத்தூர் பகுதிகளில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் அணைக் கட்டு அடுத்த தார்வழி கிராமத்தில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இதில், 120-க்கும் மேற்பட்ட எருதுகள் கலந்து கொண்டன. விழாவையொட்டி அணைக்கட்டு காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

வருவாய்த் துறையினர்விழாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண் டனர். குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்து சென்ற எருதுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு உள்ளிட்ட 20 வகையான பரிசுகளை விழா ஏற்பாட்டாளர்கள் வழங்கினர்.

அதேபோல, பென்னாத்தூர் தஞ்சான் தெருவில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இதில், வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட எருதுகள் கலந்து கொண்டன. போட்டியில் கலந்து கொள்ள வந்த எருதுகளை கால்நடை பரா மரிப்புத்துறையினர் பரிசோதனை செய்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய போட்டி பிற்பகல் 2 மணியளவில் முடிவடைந்தது. போட்டியில் வெற்றிபெற்ற எருது களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அணைக்கட்டு, வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று காலை சாரல் மழை பெய்தது. இருப்பினும், கொட்டும் மழையில் எருது விடும் விழா நேற்று நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு எருது விடும் விழாவை மழையில் நனைந்தபடி கண்டு ரசித்து ஆரவாரம் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்