பெட்ரோல், டீசல், சிலிண்டர் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம், புதிய வேளாண் சட்டம் ஆகியவற்றைக் கண்டித்து விழுப்பு ரத்தில் பாதயாத்திரை செல்ல முயன்ற காங்கிரஸார் 155 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் வேளாண்சட்டங்களை திரும்ப பெற கோரியும், பெட்ரோல், எரிவாயு உருளை விலையேற்றத்தை கண்டித்தும் நேற்று விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் விழுப்புரம் ரயிலடி அருகே மாவட்டத்தலைவர் சீனிவாசகுமார் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடை பெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் சிரஞ்சீவி, நகரத் தலைவர் செல்வராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் தயாநந்தம் உள்ளிட்டோர் விழுப்புரத்தில் இருந்து வளவனூர் வரை அகிம்சை வழி யில் பாத யாத்திரை செல்லமுயன்றனர்.
இதனை விழுப்புரம் நகர போலீஸார் தடுத்து நிறுத்தி, 45 பெண்கள் உட்பட 155 பேரை கைது செய்து, மாலை விடுவித்தனர்.
விருத்தாசலத்திலும் நேற்று இதுபோல் காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடை பெற்றது. விருத்தாசலம் பாலக்கரையிலிருந்து மங்கலம் பேட்டை வரை நடைபெற்ற பாதயாத்திரைக்கு காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவர் நல்லூர் பெரியசாமி தலைமை வகித்தார்.
பாதயாத்திரையில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராகவும், வேளாண் சட்டங்களை திரும் பப் பெற வலியுறுத்தியும் கோஷமிட்டவாறு சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago