புவனகிரி அருகே வடக்கு திட்டை கிராமத்தில் 1,200 குடும் பங்களுக்கு மேல் வசித்து வருகி ன்றன. இக்கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுகா தாரத்துறை சார்பில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு கிராம மக்களுக்கு மருத்துவ ஆலோசனை, கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும்மருந்து, மாத்திரைகள் வழங்கப் பட்டு வந்தது.
தற்போது இந்த துணை சுகாதார நிலையம் பயன்படுத்த முடியாத நிலையில் பாழடைந்து கிடக்கிறது.
மேலும் புதர்மண்டி, கட்டிம் வலுவிழந்துள்ளது. வலுவிழந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதியகட்டிடம் கட்டி துணை சுகாதாரத்தை மீண்டும் இயங்கச் செய்ய வேண் டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், இப்பகுதியில் மினி கிளினிக் திறக்கப்பட வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago