மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்த பெண்ணுக்கு திமுக மருத்துவ நிதி உதவி

By செய்திப்பிரிவு

தேனி ஊஞ்சாம்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக். லாரி டிரைவர். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் யாழினி என்ற குழந்தை உள்ளது. இக்குழந்தையின் இதயத்தில் சிறிய ஓட்டை இருப்பதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெற பொருளாதார வசதி இல்லாத நிலையில் இருந்தனர். இந்நிலையில் உத்தமபாளையத்தில் கடந்த 18-ம் தேதி நடந்த திமுக பிரச்சாரக் கூட்டத்தில் மருத்துவ உதவி கேட்டு மு.க.ஸ்டாலினிடம் கார்த்திக் மனு அளித்தார். அதில், அரசு மருத்துவக் காப்பீடு அட்டை இல்லாததால் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். மு.க.ஸ்டாலின் பேசுகையில், குழந்தையின் நிலை அறிந்து அரசு உதவி செய்ய வேண்டும். இல்லை என்றால் திமுக சார்பில் உரிய ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

இது குறித்து நந்தினி கூறுகையில், அரசு அதிகாரிகள் எனக்கு உடனடியாக ஸ்மார்ட் கார்டு வழங்கினர். மேலும் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்துள்ளனர் என்றார்.

தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் இவரை சந்தித்து இதர செலவினங்களுக்காக ரூ.10,000 நிதி உதவி செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்