இரட்டை ரயில் பாதை பணியால் பல்வேறு ரயில்கள் பகுதியாக ரத்து

By செய்திப்பிரிவு

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி - கங்கை கொண்டான் மற்றும் கோவில்பட்டி - கடம்பூர் ரயில்பாதை பிரிவுகளில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணி நடைபெற இருப்பதால், ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி சிறப்பு ரயில்கள் (எண் 02627/ 02628) வரும் 28-ம் தேதிவரை முழுமையாக ரத்து செய்யப்படும். வரும் 23 முதல் 27 வரைசென்னையிலிருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் (எண் 02631) ரயில் மதுரை வரையும், வரும்24 முதல் 28 வரை திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் (எண் 02632) ரயில் மதுரையில் இருந்தும்இயக்கப்படும்.

வரும் 24-ம் தேதி முதல் 28-ம்தேதி வரை நாகர்கோவில் - கோவை- நாகர்கோவில் பகல் நேர சிறப்பு ரயில்கள் (எண் 06321/ 06322) நாகர்கோவில் - மதுரை இடையே ரத்து செய்யப்படும்.

வரும் 23-ம் தேதி முதல் 27-ம்தேதிவரை பெங்களூரு - நாகர்கோவில் சிறப்பு ரயிலும் (எண்07235 ), வரும் 24-ம் தேதி முதல்28-ம் தேதிவரை நாகர்கோவில் - பெங்களூரு சிறப்பு ரயிலும்(எண் 07236 ) நாகர்கோவில் - விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

வரும் 26, 27, 28 ஆகிய நாட்களில் நாகர்கோவில் - கோவை சிறப்பு ரயிலும் (எண் 02667), வரும் 25, 26, 27 ஆகிய நாட்களில் கோவை- நாகர்கோவில் சிறப்பு ரயிலும் ( எண் 02668) மதுரை - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகின்றன.

வரும் 27-ம் தேதி மைசூரு - தூத்துக்குடி சிறப்பு ரயிலும் (எண் 06236 ), வரும் 28-ம் தேதி தூத்துக்குடி - மைசூரு சிறப்பு ரயிலும் (எண் 06235) மதுரை - தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

வரும் 25-ம் தேதி மும்பையில் இருந்து புறப்படும் தாதர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (எண் 06071 ), விருதுநகர் - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படும். வரும் 24, 25, 26, 28 ஆகிய நாட்களில் சென்னை எழும்பூர் - குருவாயூர் சிறப்பு ரயில்(வண்டி எண் 06127) விருதுநகர்,ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்